ADDED : மே 13, 2026 12:51 AM

ஜூ வல்லரி மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள், இரண்டாவது நாளாக நேற்றும் சரிவை சந்தித்தன. குறிப்பாக 'டைட்டன், கல்யாண் ஜூவல்லர்ஸ், சென்கோ கோல்டு' போன்ற நிறுவன பங்குகள் 5 சதவீதம் வரையிலும், 'பிரிகேட், பிரெஸ்டீஜ்' போன்ற ரியல் எஸ்டேட் பங்குகள் 3 சதவீதம் வரையிலும் சரிந்தன.
இறக்குமதியை குறைத்து ரூபாய் மதிப்பை தக்கவைக்க அரசு திட்டமிடுவதால், வரும் வாரங்களில், இறக்குமதி வரி உயர்வு போன்ற கடும் கட்டுப்பாடுகள் வரலாம் என 'ஜே.எம்., பைனான்ஷியல்' தரகு நிறுவனம் கணித்துள்ளது.
மேலும், பெட்ரோல், டீசல் விலையை தவணை முறையில் உயர்த்தவும், அன்னிய செலாவணி வெளியேற்றத்தை குறைக்க எல்.ஆர்.எஸ்., வரம்பை தற்காலிகமாக சுருக்கவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல், போர் நீடித்தால் இந்தியாவின் ஜி.டி.பி., வளர்ச்சி 6 சதவீதமாக குறையக்கூடும் என்றும் இந்நிறுவனம் கணித்துள்ளது.
