ADDED : ஜூலை 05, 2026 01:32 AM

'ஜியோ பைனான்ஷியல் சர்வீசஸ்' பங்குகளை வாங்கலாம் என்று தரகு நிறுவனமான 'ஜியோஜித்' பரிந்துரை வழங்கியுள்ளது.
முக்கிய அம்சங்கள்
* ஜியோ பைனான்ஷியல் நிறுவனம் பரிவர்த்தனைகள், இன்சூரன்ஸ் புரோக்கிங், மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட நிதி சேவைகளை வழங்கி வருகிறது
* கடந்த ஜன., - மார்ச் காலாண்டில் இதன் ஒருங்கிணைந்த வருவாய் 96.7 சதவீதம் உயர்ந்து 1,020 கோடி ரூபாயாக உள்ளது
* நிகர வட்டி வருமானம் 48.4 சதவீதம் வளர்ந்து 720 கோடி ரூபாயாக உள்ளது. வழங்கிய கடன்களின் வளர்ச்சியும், அதிக வட்டி வருமானமும் இதற்கு முக்கிய காரணிகளாக இருந்துள்ளன
*வரிக்கு பிந்தைய லாபம் 13.9 சதவீதம் குறைந்து 272 கோடி ரூபாயாக உள்ளது
* இன்சூரன்ஸ் பிரீமியம் 8 சதவீதம் உயர்ந்து 982 கோடி ரூபாயாக உள்ளது
* 2025 - 26 நிதியாண்டில் ஜியோ பேமென்ட்ஸ் வங்கியில் டிபாசிட்டுகள் 84.4 சதவீதம் உயர்ந்து, 544 கோடி ரூபாயாக உள்ளன
* ஜியோ பிளாக்ராக் ஏ.எம்.சி., நிறுவனத்தில் நிர்வாகத்தில் உள்ள சொத்து மதிப்பு 15,218 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
