தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ 'ஜியோ' ஐ.பி.ஓ.,வுக்கு முட்டுக்கட்டை 'செபி' கெடுபிடியால் தாமதம்

 'ஜியோ' ஐ.பி.ஓ.,வுக்கு முட்டுக்கட்டை 'செபி' கெடுபிடியால் தாமதம்

 'ஜியோ' ஐ.பி.ஓ.,வுக்கு முட்டுக்கட்டை 'செபி' கெடுபிடியால் தாமதம்


ADDED : மார் 07, 2026 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 01:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ச ி ல ஒழுங்குமுறை சிக்கல்கள் மற்றும் செபியின் கடுமையான விதிமுறைகள் காரணமாக, 'ரிலையன்ஸ் ஜியோ' ஐ.பி.ஓ., வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கியமான மூன்று சிக்கல்கள்

1 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தின் கீழ் உள்ள ஜியோவின் பங்குகளை தனியாக பிரிப்பதில் சில சட்ட சிக்கல்கள் நீடிக்கின்றன

2 பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக குழு தொடர்பான புதிய விதிகளை 'செபி' கடுமையாக்கியுள்ளது. இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்வதில் ஜியோவுக்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

3 உலக அளவில் 'டெலிகாம்' துறையில் நிலவும் சூழல் மற்றும் ஜியோவின் உண்மையான மதிப்பு குறித்து முதலீட்டாளர்களுக்கு தெளிவான தரவுகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த தாமதம் தற்காலிகமானதுதான் என்றும், செபியின் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்த பின், 2026ன் பிற்பகுதியில் அல்லது 2027ன் துவக்கத்தில் 'ஜியோ ஐ.பி.ஓ.,' வெளியாக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us