'ஹலோ' டைப் செய்தால் போதும் வாட்ஸாப்பில் பி.எப்., சேவை
'ஹலோ' டைப் செய்தால் போதும் வாட்ஸாப்பில் பி.எப்., சேவை
ADDED : மே 21, 2026 12:52 AM

ச ந்தாதாரர்களுக்கான தகவல் தொடர்பை எளிதாக்கவும், சேவைகளை விரைவுபடுத்தவும் வாட்ஸாப் சேவையை அறிமுகப்படுத்த, 'இ.பி.எப்.ஓ.,'தயாராகி வருகிறது.
பொதுமக்களின் புகார்களுக்கு தீர்வு காணவும், நீதிமன்ற வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும் இந்த 24 மணி நேர, 'ஏ.ஐ., சாட்பாட்' சேவை அறிமுகமாகிறது. இதன் வாயிலாக, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து, 'ஹலோ' என மெசேஜ் அனுப்பி, தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கணக்கு விபரங்களை அறியலாம்.
கணக்கு இருப்பு போன்ற ரகசிய தகவல்களை கோரும்போது, ஓ.டி.பி., உள்ளீடு செய்த பின்னரே, விபரங்கள் திரையி ல் காண்பிக்கப்படும்.
மேலும், தீவிர சிறப்பு முயற்சிகளால் ஒட்டுமொத்த நிலுவை வழக்குகள், 31,036லிருந்து 27,639 ஆகவும், 10 ஆண்டு கால பழைய வழக்குகள் 4,665 ஆகவும், நுகர்வோர் நீதிமன்ற வழக்குகள் 2,646 ஆகவும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக இ.பி.எப்.ஓ., தெரிவித்துள்ளது.
