கர்நாடகா வங்கி பங்குகள் பரிந்துரைக்கிறது 'ஆனந்த் ரதி'
கர்நாடகா வங்கி பங்குகள் பரிந்துரைக்கிறது 'ஆனந்த் ரதி'
ADDED : மே 23, 2026 02:16 AM

நான்காவது காலாண்டு முடிவில் கர்நாடகா வங்கி சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளதை அடுத்து, தரகு நிறுவனமான 'ஆனந்த் ரதி', இவ்வங்கி பங்குகளை வாங்குவதற்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், அடுத்த 12 மாதங்களுக்கான இலக்கு விலையாக 330 ரூபாயை நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், நேற்றைய வர்த்தக முடிவில், இதன் பங்கு விலை 2.34 சதவீதம் சரிந்து, 264.50 ரூபாய்க்கு வர்த்தகமானது. 'கட்டுப்படியான செயல்பாட்டு செலவுகள், நிலையான வருமானம் மற்றும் ஆரோக்கியமான சொத்து தரம் ஆகியவற்றின் காரணமாக, நடுத்தர காலத்தில், வங்கியின் சொத்து மீதான வருவாய் ஒரு சதவீதம் என்ற அளவில் நீடிக்கும். இதனால், இவ்வங்கி பங்குகளை தாராளமாக வாங்கலாம்' என தரகு நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
முக்கிய விபரங்கள்
கடன் வழங்கும் வளர்ச்சி 6.90 சதவீதமாக உயர்வு
கடன் வளர்ச்சியை 15-20 சதவீதம் வரை உயர்த்த திட்டம்
நிகர வட்டி லாப விகிதம் 3.07 சதவீதமாக உயர்வு
மொத்த வராக்கடன் விகிதம் 0.54 சதவீதம் சரிவு
'புரொவிஷன் கவரேஜ் ரேஷியோ', 4.17 சதவீதமாக உயர்வு
