தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ காரீப் சாகுபடி பரப்பு: 21 லட்சம் ஹெக்டேர் சரிவு

 காரீப் சாகுபடி பரப்பு: 21 லட்சம் ஹெக்டேர் சரிவு

 காரீப் சாகுபடி பரப்பு: 21 லட்சம் ஹெக்டேர் சரிவு


UPDATED : ஆக 19, 2026 01:35 AM

ADDED : ஆக 19, 2026 01:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2026 01:35 AM ADDED : ஆக 19, 2026 01:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'நடப்பு காரீப் சீசனில் நாட்டின் மொத்த சாகுபடி பரப்பு 20.95 லட்சம் ஹெக்டேராக சரிந்துள்ளது' என மத்திய வேளாண் அமைச்சகம் கணித்துள்ளது.

இது குறித்து வேளாண் அமைச்சக தரவில் தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் மொத்த காரீப் சாகுபடி பரப்பு கடந்தாண்டின் 1,037.52 லட்சம் ஹெக்டேரை விட 1016.57 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது. நெல் சாகுபடி பரப்பு கடந்தாண்டை விட 14.37 லட்சம் ஹெக்டேராக குறைந்துள்ளது.

அதாவது கடந்தாண்டு 393.44 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில் இந்தாண்டு 379.07 லட்சம் ஹெக்டேராக உள்ளது.

பயறு வகைகள் சாகுபடி கடந்தாண்டு 108.49 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், 108.14 லட்சம் ஹெக்டேராக சற்று குறைந்துள்ளது. கரும்பு சாகுபடி பரப்பு கடந்தாண்டு 58.62 லட்சம் இருந்த நிலையில், தற்போது 58.31 லட்சம் ஹெக்டேரை அடைந்துள்ளது.

பருத்தி சாகுபடி பரப்பு கடந்தாண்டு 108.26 லட்சம் ஹெக்டேராக இருந்த நிலையில், இந்தாண்டு 107.30 லட்சம் ஹெக்டேராக உள்ளது. எண்ணெய் வித்து சாகுபடி பரப்பு கடந்தாண்டு 185.36 லட்சம் ஹெக்டேரா க இ ருந்த நிலையில், தற்போது 184.46 லட்சம் ஹெக்டேராக உள்ளது. மழை அதி கரித்தால், சாகுபடி பரப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image 1610407


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us