ADDED : நவ 23, 2025 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
த னியார் துறையைச் சேர்ந்த கோட்டக் மஹிந்தரா வங்கி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு பங்கு பிரிப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது. தங்கள் வங்கியின் பங்குகளை வைத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு, ஒரு பங்கிற்கு 5 பங்குகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
சிறு முதலீட்டாளர்கள் உட்பட பலதரப்பட்ட முதலீட்டாளர்களின் சந்தை பங்கேற்பை அதிகரிக்கவும், பங்குகளின் விலையை மலிவானதாக்கி, அவற்றின் லிக்யூடிட்டியை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.

