லலிதா ஜூவல்லரி ஐ.பி.ஓ., முதல் நாளில் 69% விண்ணப்பம்
லலிதா ஜூவல்லரி ஐ.பி.ஓ., முதல் நாளில் 69% விண்ணப்பம்
ADDED : ஆக 18, 2026 03:28 AM

சென்னையை தலைமையிடமாக கொண்ட 'லலிதா ஜூவல்லரிமார்ட்' நிறுவன பங்கு வெளியீட்டின் முதல் நாளான நேற்று 69 சதவீதம் அளவிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ஐ.பி.ஓ., வாயிலாக இந்நிறுவனம் 1,700 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 1,200 கோடி ரூபாயும், ஆபர் பார் சேல் வகையில் 500 கோடி ரூபாயும் திரட்டுகிறது. ஒரு பங்கின் விலை 190 ரூபாய் முதல் 201 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
முதல் நாளில், சிறு முதலீட்டாளர்கள் 74 சதவீதமும், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் 67 சதவீதமும், நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் 61 சதவீதம் அளவிற்கும் விண்ணப்பித்துள்ளனர். ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து ஏற்கனவே 508 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ளது.
இந்த ஐ.பி.ஓ., நாளையுடன் முடிவடைகிறது. பங்குகள் ஆகஸ்ட் 24ம் தேதி பி.எஸ்.இ., மற்றும் என்.எஸ்.இ.,யில் பட்டியலிடப்பட உள்ளது.
