தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ நிதி திட்டங்களாக மாறும் நிலங்கள் எட்டாக்கனியாகும் 'சொந்த வீடு'

 நிதி திட்டங்களாக மாறும் நிலங்கள் எட்டாக்கனியாகும் 'சொந்த வீடு'

 நிதி திட்டங்களாக மாறும் நிலங்கள் எட்டாக்கனியாகும் 'சொந்த வீடு'


UPDATED : ஜன 28, 2026 02:00 AM

ADDED : ஜன 28, 2026 01:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2026 02:00 AM ADDED : ஜன 28, 2026 01:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவில் நிலங்கள் சொத்துக்களாக பார்க்கப்பட்ட காலம்போய், சந்தையில் பெருகி வரும் நிதி திட்டங்களாக அவை மாறி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், எதிர்வரும் சந்ததியினருக்கு வீடு வாங்குவது எட்டாக்கனியாக மாறக்கூடும் என 'விஸ்டம் ஹேட்ச்' நிறுவனத்தின் உரிமையாளர் அக்ஷத் ஸ்ரீவஸ்தவா சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பது, பேசுபொருளாகிஉள்ளது.

ஒரு காலத்தில் நிலம் என்பது வீடு கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இப்போது அது வீடு கட்டுவதற்கானதாக இல்லாமல், பணம் சம்பாதிப்பதற்கான ஒரு சொத்தாக மாறி வருகிறது.

தற்போது நிதிச் சந்தையில், 'ரீட்ஸ்' மற்றும் ஒரு விலையுயர்ந்த சொத்தை பலரும் சேர்ந்து வாங்கும் முறையான, 'பிராக்ஷனல் ஓனர்ஷிப்' போன்ற முறைகள் பெருகி வருகின்றன.

Image 1527435


இதனால், ஏற்கனவே நிலங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை விற்காமல், வருமானம் தரும் நிதி திட்டமாக மாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், வீடுகள் வாங்குவது கடினமாக மாறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு உதாரணமாக, மும்பையின் 20 சதவீத நிலங்கள், 6 உரிமையாளர்களிடமே உள்ளது என்றும் இது, அவர்களே விலையை தீர்மானிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலங்களை விற்காமல், அவற்றின் விலையை உயர்த்துவதால், எதிர்காலத்தில் இந்திய நகரங்களிலும், 'ஹாங்காங்'கை போல மிகச்சிறிய வீடுகளுக்கே கோடிக்கணக்கான ரூபாயை செலவிடும் நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us