ADDED : நவ 11, 2025 01:00 AM

முதல் நாளில் ஏமாற்றமளித்த 'லென்ஸ்கார்ட்'
'லெ ன்ஸ்கார்ட்' நிறுவனம் பங்குச்சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட நிலையில், துவங்கும்போதே 3 சதவீத சரிவுடன் வர்த்தகமானது. பின், கிட்டதட்ட 12 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்கள் சற்று கலக்கமடைந்தனர். வர்த்தகத்தின் இடையில், மீட்சியடைந்த இந்நிறுவன பங்குகள், முடிவின்போது, 0.63 சதவீதம் உயர்ந்து, ஒரு பங்கின் விலை 404.55 ரூபாய்க்கு நிறைவடைந்தது. ஐ.பி.ஓ.,வில் இந்நிறுவனத்தின் பங்குகள் விலை 382 முதல் 402 ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிறுவனம் விற்பனை செய்ய நிர்ணயித்திருந்த இலக்கைவிட, 28.26 மடங்கு அதிகமாக முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
'இன்கிரெட் ஹோல்டிங்ஸ்' விண்ணப்பம்
'இ ன்கிரெட் பைனான்சியல் சர்வீசஸின்' ஒரு அங்கமான இன்கிரெட் ஹோல்டிங்ஸ், புதிய பங்கு வெளியீட்டுக்கு, ரகசிய விண்ணப்ப முறையில் செபியிடம் சமர்ப்பித்துள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக, இந்நிறுவனம் 3,000 முதல் 4,000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்து இருப்பதாக கூறப்படுகிறது.

