உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 21, 2026 12:49 AM

அ நிறம் | அளவு
ஊ ழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு மற்றும் மத அடையாளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையால், 'லென்ஸ்கார்ட்' நிறுவன பங்குகள் நேற்று 5 சதவீதம் வரை சரிந்தன.
நிறுவனத்தின் பழைய 'குரூமிங் பாலிசி' ஆவணம் ஒன்று இணையத்தில் கசிந்தது. அதில், ஊழியர்கள் பொட்டு மற்றும் திலகம் அணிய தடை விதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது.
இது குறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூயூஷ் பன்சால் வெளியிட்ட விளக்கத்தில், “வைரலான அந்த ஆவணம் மிகவும் பழமையானது; தற்போது நடைமுறையில் இல்லாதது. ” என தெரிவித்தார்.
இந்த விளக்கத்துக்கு பின், வர்த்தக முடிவில் பங்கு விலை, 0.31 சதவீதம் உயர்ந்து 536.20 ரூபாய்க்கு நிறைவடைந்தது.
