ADDED : பிப் 21, 2026 09:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எல்.ஜி., எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பங்கு விலை, தற்போதைய விலையில் இருந்து 16 சதவீதம் வரை வளர்ச்சி காணும் என 'ஆக்ஸிஸ் டைரக்ட்' கணித்துள்ளது.
டிவி, பிரிஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ள எல்.ஜி.,எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் பங்கு, நேற்றைய வர்த்தக நேர முடிவில், 1,547.80 ரூபாயாக உள்ளது.
இந்நிலையில், ஆக்ஸிஸ் டைரக்ட் நிறுவனம் வெளியிட்ட கணிப்பில், இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை, எபிடா மற்றும் நிகர லாபம், வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் பங்குகளை வாங்கலாம் எனவும், தற்போதைய விலையில் 16.60 சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பங்கின் விலை 1,815 ரூபாயாக அதிகரிக்கும் எனவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.

