ADDED : ஜூன் 01, 2026 02:50 AM

எ ல்.ஐ.சி., நிறுவனம், தனது டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தவும் தனியாக ஒரு 'பின்டெக்' பிரிவை தொடங்க தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இதற்காக 'பின்டெக் மற்றும் இன்சூர்டெக்' நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வரும் எல்.ஐ.சி., பாலிசிதாரர்களின் வருவாயை அதிகரிக்க சில குறிப்பிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
நிதிநிலையை பொறுத்தவரை, கடந்த மார்ச் காலாண்டில் எல்.ஐ.சி., நிறுவனத்தின் நிகர லாபம் 23 சதவீதம் உயர்ந்து சாதனை அளவாக 23,420 கோடி ரூபாயை பதிவு செய்துள்ளது. அத்துடன் 1:1 போனஸ் பங்குகள் மற்றும் 67 சதவீதம் கூடுதல் டிவிடெண்டு ஆகியவற்றை அறிவித்து உள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனம் பாரம்பரிய காப்பீட்டு துறையிலிருந்து டிஜிட்டல் மற்றும் பின்டெக் தளத்திற்கு மாறுவது அதன் வணிகத்தை மேலும் வேகப்படுத்தும்.
வலுவான லாபம், போனஸ் பங்குகள் மற்றும் நல்ல டிவிடெண்டு முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளதால், நீண்ட கால முதலீட்டிற்கு எல்.ஐ.சி., ஒரு சிறந்த பங்காக பார்க்கப்படுகிறது என இத்துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
