ADDED : ஜூன் 26, 2026 06:40 AM

குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 24,125.85 24,261.60 24,039.00 24,056.00
நேற்று 104 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, 233 புள்ளிகள் வரையிலான அதிகபட்ச உயர்வு கண்டு, பின் இறங்கி, நாளின் இறுதியில் 34 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 18 பரந்த சந்தை குறியீடுகளில் 2 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 16 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி100' குறியீடு அதிகபட்சமாக 0.15 சதவிகித ஏற்றத்துடனும், 'நிப்டி மைக்ரோகேப்250' குறியீடு அதிகபட்சமாக 0.62 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில், 9 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 12 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஆட்டோ' குறியீடு அதிகபட்சமாக 2.25 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 1.37 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,418 நிறுவனங்களின் பங்குகளில் 1,231 ஏற்றத்துடனும்; 2,069 இறக்கத்துடனும்; 118 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. தொடர்ந்து முக்கிய குறுகிய கால சராசரிகள் (இ.எம்.ஏ.,) மற்றும் இச்சிமோகு கிளவுட் லெவலுக்கு மேலேயே நிப்டி நிறைவடைந்துள்ளது. இது ஏற்றத்திற்கான வாய்ப்பு இன்னமும் உள்ளது என்பதையே காட்டுகிறது. எம்.ஏ.சி.டி., ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஆர்.ஓ.சி., போன்றவையும் ஏற்றத்திற்கான வாய்ப்பு இருப்பதையே உணர்த்தும் வண்ணம் உள்ளன. 24,125, -24,260 லெவல்களில் வலுவானதொரு ரெசிஸ்டென்ஸ் இருக்கின்றது. ஒருவேளை இதைத் தாண்டினாலும், 24,440 லெவலில் வலுவான ரெசிஸ்டென்ஸ் காத்திருக்கிறது. இறக்கம் வந்து, 24,020-க்கு கீழே சென்றால், 23,850- 23,860 வரை சென்று திரும்பலாம். 24,020-க்கு மேலே இருக்கும் வரை, 24,260-ஐ நோக்கி பயணிக்க வாய்ப்புள்ளது. செய்திகள் சாதகமாக இருந்தால் 24,440-ஐ நோக்கி பயணிக்கவும் வாய்ப்புள்ளது.
ஆதரவு 23,975 23,895 23,810
தடுப்பு 24,200 24,340 24,425
நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி50 (எண்ணிக்கை)
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 796.00 2.80
ஓ.என்.ஜி.சி., 233.15 -6.85
டாடா ஸ்டீல் 188.60 -1.56
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் 408.50 -5.05
விப்ரோ 175.09 0.61
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
எஸ் பேங்க் 24.80 -0.14
சுஸ்லான் எனர்ஜி 57.01 -0.90
அசோக் லேலண்ட் 161.12 6.21
ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 108.53 0.46
என்.எம்.டி.சி., 84.74 -0.96
நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)
பந்தன் பேங்க் 202.15 -9.61
ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் 678.60 15.60
என்.பி.சி.சி (இந்தியா) 107.00 -1.88
ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் 1137.00 74.10
மணப்புரம் பைனான்ஸ் 318.70 0.35
மற்ற சில பங்குகளின் விலை விவரம்
சி.ஜி., பவர் அண்டு இண்டஸ்ட்ரீயல் 941.90 22.45
ரெடிங்டன் 285.01 1.16
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் 418.00 27.10
டாடா கெமிக்கல்ஸ் 745.00 16.65
டி.வி.எஸ்., எலெக்ட்ரானிக்ஸ் 502.00 28.75
