டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,150- புள்ளிகளுக்கு தயாராவதை போல தெரிகிறது
டெக்னிக்கல் அனாலிசிஸ்: 26,150- புள்ளிகளுக்கு தயாராவதை போல தெரிகிறது
UPDATED : பிப் 19, 2026 02:18 AM
ADDED : பிப் 19, 2026 01:56 AM


மதியம் 2 மணி வரை, சிறு சிறு இறக்க ஏற்றங்களை கண்ட நிப்டி, அதன் பின் சீராக ஏற்றம் கண்டு, நாளின் இறுதியில் 93 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி ஸ்மால் கேப்50' குறியீடு அதிகபட்சமாக 0.60 சதவிகித ஏற்றத்துடனும்; 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு குறைந்தபட்சமாக 0.29 சதவிகித ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
19 துறை சார்ந்த குறியீடுகளில், 17 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 2 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மெட்டல்' குறியீடு, அதிகபட்சமாக 1.33 சதவிகித ஏற்றத்துடனும்; நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக 1.23 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த 3,277 பங்குகளில் 1,713 ஏற்றத்துடனும்; 1,456 இறக்கத்துடனும், 108 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 20, 50, 100 மற்றும் 200 நாள் சராசரிக்கு மேலே (இ.எம்.ஏ.,) வர்த்தகமாகிறது. மொமொண்டம் இண்டிகேட்டர்களும் ஏற்றம் ஓரளவுக்கு தொடர்வதற்கான வாய்ப்புகளையே காட்டுகிறது. செய்திகள் ஆதரவாக இருந்தால் அடுத்த ரெசிஸ்டென்ஸான 26,150 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.


