sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 பாய்ச்சலுக்கு தயாராகும் லக்கேஜ் துறை

/

 பாய்ச்சலுக்கு தயாராகும் லக்கேஜ் துறை

 பாய்ச்சலுக்கு தயாராகும் லக்கேஜ் துறை

 பாய்ச்சலுக்கு தயாராகும் லக்கேஜ் துறை


UPDATED : டிச 26, 2025 03:28 AM

ADDED : டிச 26, 2025 03:26 AM

Google News

UPDATED : டிச 26, 2025 03:28 AM ADDED : டிச 26, 2025 03:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியர்கள் சமீபகாலமாக சுற்றுப்பயணங்கள் மேற்கொள்வது அதிகரித்து வரும் சூழலில், அதற்கு தேவையான பிராண்டட் லக்கேஜ்களை வாங்குவதிலும் தற்போது அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன்காரணமாக, இத்துறையை சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக உள்ளன.

குறிப்பாக, உள்நாட்டைச் சேர்ந்த சபாரி மற்றும் வி.ஐ.பி., போன்ற நிறுவனங்களின் பங்குகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக 'மோதிலால் ஓஸ்வால்' நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகின்றன.

Image 1513120


அதேநேரம், வெளிநாட்டு பிராண்டுகளும் இந்தியாவில் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, அமெரிக்காவை சேர்ந்த 'சாம்சோனைட்' நிறுவனத்தின் 'சாம்சோனைட், அமெரிக்கன் டூரிஸ்டர் மற்றும் காமிலியன்ட்' ஆகிய பிராண்டுகள் இந்தியர்களின் விருப்ப தேர்வாகவே உள்ளன.

சாம்சோனைட் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தொழிற்சாலையை இந்தியாவின் நாசிக்கில் நிறுவியுள்ளது. நாட்டில் பரவலாக, 600 கடைகளை வைத்துள்ள நிலையில், அதை 1,000ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

இதுபோல, பிரான்ஸின் 'டெல்சி பாரிஸ்' சுவிட்சர்லாந்தின் 'விக்டோரினாக்ஸ்' உள்ளிட்டவை, உயர்தர லக்கேஜ் பிரிவில் முன்னணியில் உள்ளன.

Image 1513121
Image 1513122


இந்தியர்கள், தற்போது தரமற்ற மலிவு விலை லக்கேஜ்களை விரும்புவதில்லை. நீண்ட நாட்களுக்கு உழைக்கும் பிராண்டுகளை தேர்ந்தெடுக்கின்றனர். எனவே, நுகர்வோரின் இந்த மாற்றத்தால், எதிர்காலத்தில் இந்தியா லக்கேஜ் துறையில் மிகப்பெரிய சந்தையாக விளங்கும்.
-ஜெய் கிருஷ்ணன்
தெற்காசிய தலைமை செயல் அதிகாரி, சாம்சோனைட்







      Dinamalar
      Follow us