sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 சந்தை துளிகள்

/

 சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

 சந்தை துளிகள்


UPDATED : ஜன 29, 2026 01:45 AM

ADDED : ஜன 29, 2026 01:42 AM

Google News

UPDATED : ஜன 29, 2026 01:45 AM ADDED : ஜன 29, 2026 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'பஜாஜ் பைனான்ஸ்' நிறுவனத்தில்

எல்.ஐ.சி., ரூ.5,120 கோடி முதலீடு


வ ங்கி சாராத நிதி நிறுவனமான, 'பஜாஜ் பைனான்ஸ்' நிறுவனத்தின், ஒரு ரூபாய் முகமதிப்புள்ள 5.12 லட்சம் கடன் பத்திரங்களை வாங்கி இருப்பதாக, பங்குச்சந்தையில் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., தெரிவித்துள்ளது. மொத்தம் 5,120 கோடி ரூபாய்க்கு கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. முறையான விதிமுறைகளின்படி, இந்த கடன் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசு அல்லது ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல் எதுவும் தேவையில்லை எனவும் எல்.ஐ.சி., தெரிவித்துள்ளது.

Image 1527962

ரூ.2,800 கோடி திரட்ட வரும் 'பிராக்டல் அனாலிட்டிக்ஸ்'


மு ம்பையை தலைமையிடமாக கொண்ட, 'பிராக்டல் அனாலிட்டிக்ஸ்' என்ற நிறுவனம், வரும் பிப்ரவரியில் 2,800 கோடி ரூபாயை திரட்ட புதிய பங்கு வெளியீட்டுக்கு வரவுள்ளது. இதில், புதிய பங்கு விற்பனை வாயிலாக 1,000 கோடி ரூபாயும், மீதமுள்ள தொகையை ஆபர் பார் சேல் முறையில் திரட்ட உள்ளது. ஐ.பி.ஓ.,வாயிலாக திரட்டும் தொகையை, புதிய அலுவலகம் அமைக்கவும், லேப்டாப் கொள்முதல் செய்யவும் பயன்படுத்த இருப்பதாக செபியிடம் தாக்கல் செய்த விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

'Image 1527963

ஷேடோபேக்ஸ்' பங்குகள் முதல் நாளில் 12 சதவீதம் சரிவு


பெ ங்களூரை தலைமையிடமாக கொண்ட 'ஷேடோபேக்ஸ் டெக்னாலஜிஸ்' பங்குகள் நேற்று சந்தையில் பட்டியலிடப்பட்டன. பங்கு ஒன்றின் விலை 124 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையில் 9 சதவீதம் சரிந்து, 113 ரூபாய்க்கும், தேசிய பங்குச்சந்தையில் 112.60 ரூபாய்க்கும் வர்த்தகத்தை துவங்கியது. வர்த்தகத்தின் இடையில் மேலும் 3 சதவீதம் சரிந்த நிலையில், வர்த்தக நேர முடிவில், பங்கு விலை என்.எஸ்.இ.,யில் 109.18 ரூபாயாகவும், பி.எஸ்.இ.,யில் 109.90 ரூபாயாகவும் இருந்தது.

Image 1527964

ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தால் காலணி நிறுவன பங்குகள் உயர்வு


கா லணி தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள், நேற்றைய வர்த்தகத்தின் போது 10 சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டன. அதிகபட்சமாக, லிபர்டி ஷூஸ் பங்குகள் 15 சதவீதமும், ரெட் டேப், சூப்பர் ஹவுஸ் பங்குகள் 12 சதவீதமும், காதிம் இந்தியா, மெட்ரோ பிராண்ட்ஸ் பங்குகள் தலா 10 சதவீதமும் உயர்வு கண்டன. இதற்கு, நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் லாபத்தை பதிவு செய்தது, இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, புதிய ஏற்றுமதி வாய்ப்பு ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us