தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

 சந்தை துளிகள்


ADDED : மே 16, 2026 12:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 16, 2026 12:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரூ.10,000 கோடி சந்தை மதிப்பை தாண்டிய 'டைமண்டு பவர் இன்ப்ரா'


'டை மண்டு பவர் இன்ப்ரா' நிறுவனம், மின்சார கேபிள்கள் உள்ளிட்ட மின் உபகரணங்களை உற்பத்தி செய்து வருகிறது. நேற்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 6 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்ததால், சந்தை மதிப்பு முதல்முறையாக 10,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. ஆர்டர் புத்தகம் வலுவாக இருப்பதால், இந்த பங்கு முதலீட்டாளர்களை கவர்ந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திலேயே பங்கு விலை 39 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது.



'கனரா ஹெச்.எஸ்.பி.சி., லைப்' பாலிசிதாரர்களுக்கு போனஸ்


'க னரா ஹெச்.எஸ்.பி.சி., லைப் இன்சூரன்ஸ்' நிறுவனம் 2025 - 26ம் நிதி ஆண்டுக்கு 271 கோடி ரூபாய் போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது. 2.33 லட்சம் தகுதியுள்ள பாலிசிதாரர்களுக்கு இந்த போனஸ் கிடைக்கும். கடந்த மார்ச் 31ம் தேதி நிலவரப்படி பாலிசி செயல்பாட்டில் இருந்தவர்களுக்கு மட்டுமே போனஸ் கிடைக்கும். முந்தைய நிதியாண்டை விட போனஸ் 8.31 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.



குறைந்த செலவில்'கிரிப்டோ பியூச்சர்ஸ்'


அ திக மதிப்பில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு மட்டுமே இதுவரை குறைந்த கட்டணத்தில் கிரிப்டோகரன்சி 'பியூச்சர்ஸ்' வர்த்தக வசதி கிடைத்த நிலையில், தற்போது சிறு வர்த்தகர்களுக்கும் அந்த வசதியை 'வசீர் எக்ஸ்' என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வர்த்தக மதிப்பிலும் குறைந்தபட்ச வரம்பு இல்லை. அமெரிக்க டாலராக மாற்றாமல் நேரடியாக ரூபாயிலேயே வர்த்தகம் செய்யலாம்.



'லைட்ஹவுஸ் கேன்டன்பிரைவேட் கிரெடிட் பண்டு


ச ர்வதேச முதலீட்டு நிறுவனமான 'லைட்ஹவுஸ் கேன்டன்' இந்திய சந்தையை குறிவைத்து 1,200 கோடி ரூபாய் மதிப்புள்ள 'எல்.சி., லுாமினீர் கிரெடிட் பண்டு' என்ற பிரைவேட் கிரெடிட் பண்டை தொடங்கியுள்ளது. இது ஒரு 'ஏ.ஐ.எப்' பண்டு. இந்த பண்டு, பெரிய நிறுவனங்களுக்கு குறிப்பாக வளர்ச்சி திட்டங்கள், கையகப்படுத்துதல் போன்ற தேவைகளுக்கு கடன் வழங்க இருக்கிறது. உற்பத்தி, நுகர்பொருட்கள் போன்ற துறைகளிலும், பெரிய கார்ப்பரேட் குழுமங்களிலும் முதலீடு செய்வதற்கும் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடன் பத்திரங்களுக்குவரியை குறைக்க திட்டம்


ரூ பாய் மதிப்பின் தொடர் வீழ்ச்சிக்கு அன்னிய முதலீடுகள் வெளியேறுவதும் முக்கிய காரணமாக உள்ளது. கடன் பத்திர சந்தையில் அன்னிய முதலீடுகளை ஈர்க்க வரியை குறைக்கலாம் என்று ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்த நிலையில், தற்போது மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அன்னிய முதலீட்டாளர்கள் பத்திரங்களில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு 2023க்கு முன் 5 சதவீத வரி செலுத்தினார்கள். அதன்பின் கிட்டத்தட்ட 20 சதவீத வரி செலுத்துகின்றனர். எனவே, வரியை குறைத்து அன்னிய முதலீடுகளை ஈர்ப்பது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us