தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/சந்தை துளிகள்

சந்தை துளிகள்

சந்தை துளிகள்


ADDED : மே 21, 2026 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 01:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

43% லாபம் கொடுத்த 'வோடபோன் ஐடியா' பங்கு

'வோ டபோன் ஐடியா' நிறுவன பங்குகள், கடந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 6 சதவீதமும், கடந்த ஒரு மாதத்தில் 43 சதவீதமும் உயர்ந்துள்ளதாக என்.எஸ்.இ., தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 52 வார குறைந்தபட்ச விலையான 6.12 ரூபாயில் இருந்த இந்நிறுவன பங்கு, மே 19ம் தேதி 52 வார உச்ச விலையான 13.68 ரூபாயை தொட்டுள்ளது.

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த காலாண்டில், நிறுவனம் 51,970 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த நிகர லாபத்தை பதிவு செய்தது. நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் முந்தைய ஆண்டை விட 3 சதவீதம் உயர்ந்து 11,332 கோடி ரூபாயாக அதிகரித்ததும் பங்கு உயர்விற்கான முக்கிய காரணமானது.

டி.சி.சி., கட்டணத்தை உயர்த்திய 'ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி'

ஐ .சி.ஐ.சி.ஐ., வங்கி தனது டெபிட் கார்டுகளுக்கான, 'டைனமிக் கரன்சி கன்வெர்ஷன்' கட்டணத்தை ஒரு சதவீதத்திலிருந்து 3.5 சதவீதமாக உ யர்த்தியுள்ளது .

வெளிநாடுகளில் பொருட்கள் அல்லது சேவைகளை வாங்கி, இந்திய ரூபாயில் டெபிட் கார்டு வாயிலாக பணம் செலுத்துபவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்தபடியே வெளிநாட்டு ஆன்லைன் தளங்களில் பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கு இந்த புதிய கட்டணம் பொருந்தும். இந்த கட்டண உயர்வு வரும் ஜூன் 21 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us