தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

 சந்தை துளிகள்


ADDED : மே 28, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 05:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதிய உச்சத்தில் மின் துறை குறியீடு

மி ன் துறை பங்குகளுக்கான, 'பி.எஸ்.இ., பவர்' குறியீடு நேற்று கிட்டத்தட்ட 3 சதவீதம் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இக்குறியீடு 2 மாதங்களில் 24 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த குறியீட்டில் உள்ள, 'அதானி பவர், பி.ஹெச்.இ.எல்., சி.ஜி., பவர், ஜி.இ., வெர்னோவா டி&டி இந்தியா, ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா, சீமென்ஸ் எனர்ஜி இந்தியா'ஆகிய 6 பங்குகளும் புதிய உச்சம் தொட்டுள்ளன. மின்சாரத்துக்கான டிமாண்ட் உயர்வு, 'டேட்டா சென்டர்'களின் விரிவாக்கம் போன்ற காரணங்களால் மின் துறை பங்குகள் உயர்ந்துள்ளன.



சுவிட்சர்லாந்தை விஞ்சிய ஹாங்காங்

சு விட்சர்லாந்தை பின்னுக்கு தள்ளி, உலகின் மிகப்பெரிய செல்வ மேலாண்மை மையமாக ஹாங்காங் முதலிடத்தை பிடித்துள்ளது. சீன முதலீடுகளின் வரத்து மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தை வளர்ச்சியும் இதற்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. 'போஸ்டன் கன்சல்டிங் குரூப்' அறிக்கையின்படி, 2025ம் ஆண்டில் ஹாங்காங்கிடம் நிர்வாகத்தில் உள்ள சர்வதேச சொத்து மதிப்பு, 10.70 சதவீதம் உயர்ந்து 277.68 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.



பத்திரங்கள் வெளியீடுநகராட்சிகள் ஆர்வம்

உ ள்கட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள நகராட்சிகள் பெருமளவில் வங்கி கடன்களையே சார்ந்துள்ளன. ஆனால், சமீபகாலமாக குடிநீர் வழங்கல், கழிவு மேலாண்மை போன்ற நவீன உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக கடன் பத்திரங்கள் வெளியிடுவதை நோக்கி நகர்ந்து வருகின்றன. இதற்காக, மத்திய அரசும், செபியும் வழங்கும் ஆதரவு காரணமாக பல்வேறு மாநகராட்சிகள் பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளன. இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பென்ஷன் பண்டுகள் போன்ற நிறுவன முதலீட்டாளர்களும் இப்பத்திரங்களில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us