தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

 சந்தை துளிகள்


ADDED : ஜூலை 09, 2026 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 02:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொடர் சரிவுக்கு பின் உயர்வு கண்ட 'எம்.சி.எக்ஸ்.,'

கடந்த 4 நாட்களாக சரிந்து வந்த 'எம்.சி.எக்ஸ்.,' பங்கு விலை, நேற்றைய வர்த்தகத்தில் 4.42 சதவீதம் உயர்ந்து 2,760 ரூபாயை தொட்டது. ஆர்.பி.ஐ.,யின் புதிய கட்டுப்பாடுகளால் வர்த்தகம் குறைந்து பணப்புழக்கம் சரிந்ததால் இப்பங்கு சில நாட்களாக வீழ்ச்சியடைந்திருந்தது. இந்நிலையில், விலை குறைவாக இருந்ததால் முதலீட்டாளர்கள் மீண்டும் ஆர்வம் காட்டியதே நேற்றைய விலை உயர்வுக்கு காரணம் என சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

'பி.சி., ஜுவல்லர்' பங்கு 2.23% உயர்வு

'பி.சி., ஜூவல்லர்' நிறுவனம், நடப்பு காலாண்டிற்குள் தங்களை முற்றிலும் 'கடன் இல்லாத நிறுவனம்' ஆக மாற்றும் இலக்கை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இதற்கென இரண்டு கூட்டமைப்பு வங்கிகளின் நிலுவை தொகையை முழுமையாக செலுத்தி விட்டதாகவும் அறிவித்துள்ளது. இதன் வாயிலாக தனது ஒட்டுமொத்த கடனில் 90 சதவீதத்திற்கும் மேல் இந்நிறுவனம் குறைத்துள்ளது. இந்த செய்தியால், நேற்றைய வர்த்தகத்தில் அதன் பங்கு விலை 2.23 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து 9.62 ரூபாய்க்கு வர்த்தகமானது.

'சவுத் இந்தியன் வங்கி' பங்குகள் 10% வரை சரிவு

'சவுத் இந்தியன் வங்கி'யின், புதிய சி.இ.ஓ., நியமனம் மற்றும் ஜூலை 16ல் நடக்கவுள்ள நிதி நிலை முடிவுகள் குறித்த நிர்வாக குழு கூட்டம் பற்றிய அறிவி ப்புகள் வெளியான போதிலும், பங்குச்சந்தையின் பொதுவான மந்தநிலை காரணமாக நேற்றைய வர்த்தகத்தில் பங்கு விலை கிட்டத்தட்ட 10 சதவீதம் வரை சரிந்து 43.01 ரூபாய் வரை சென்றது. இறுதியில், இப்பங்கு 7.87 சதவீத வீழ்ச்சியுடன் 43.92 ரூபாய்க்கு வர்த்தகமானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us