தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சந்தை துளிகள்

 சந்தை துளிகள்

 சந்தை துளிகள்


ADDED : ஜூலை 17, 2026 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 17, 2026 02:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஹெச்.டி.எப்.சி., பண்டு' வாங்கியதால் 'ஜுபிடர் ஹாஸ்பிட்டல்ஸ்' பங்கு உயர்வு


மு ம்பையை தலைமையிடமாக கொண்ட, 'ஜுபிடர் லைப் லைன் ஹாஸ்பிட்டல்ஸ்' நிறுவனத்தின் 1.43 சதவீத பங்குகளை, 'ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு' நிறுவனம் வாங்கியுள்ளது. பி.எஸ்.இ.,யின் 'பிளாக் டீல்' தரவுகளில் தெரியவந்துள்ளது.

ஹெச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம், ஒரு பங்கை 1,483.50 ரூபாய் என்ற விலையில், இரண்டு கட்டங்களாக மொத்தம் 9.37 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. இந்த பரிவர்த்தனையின் மொத்த மதிப்பு 139 கோடி ரூபாயாகும்.

இதையடுத்து, நேற்றைய வர்த்தக நிறைவில்,'ஜுபிடர் லைப் லைன் ஹாஸ்பிட்டல்ஸ்' நிறுவன பங்கு கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்ந்து, 1,559.10 ரூபாயாக நிறைவடைந்தது.

முதல் முறையாக 'போனஸ்' வழங்க 'பேடிஎம்' தாய் நிறுவனம் பரிசீலனை


'பே டிஎம்'மின் தாய் நிறுவனமான, 'ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்', கடந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக, 'போனஸ் பங்குகள்' வழங்குவது குறித்து பரிசீலிக்க உள்ளது.

இதற்கான விகிதம் மற்றும் 'ரிக்கார்டு தேதி' ஆகியவை, ஜூலை 20ம் தேதி நடைபெறும் நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025ம் நிதியாண்டில் 663 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த பேடிஎம், 2026 நிதியாண்டில், 552 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 'பதஞ்சலி புட்ஸ்' பங்குகள் சரிவு



'ப தஞ்சலி புட்ஸ்' நிறுவன பங்குகள், நேற்று முன்தினம் கிட்டத்தட்ட 15 சதவீதம் சரிந்து, கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 348 ரூபாயை தொட்டன. இந்த சரிவு நேற்றைய வர்த்தகத்திலும் நீடித்தது.

நேற்றைய வர்த்தக நிறைவில், இந்நிறுவன பங்கு மேலும் 0.19 சதவீதம் சரிந்து, 347.25 ரூபாயில் நிறைவடைந்தது. இது, கடந்த 2020 ஏப்ரலுக்கு பிறகு பதிவான மிகக் குறைந்த விலையாகும்.

சமையல் எண்ணெய் வணிகத்தில் விலை ஏற்ற இறக்கங்கள், கடுமையான போட்டி உள்ளிட்ட காரணிகள் நிறுவனத்தின் லாபத்தை பாதிக்கும் அபாயமாக இருப்பதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us