ADDED : மே 30, 2026 12:15 AM

நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.)
நிப்டி50 (எண்ணிக்கை)
ஹெச்.டி.எப்.சி., பேங்க் 747.25 -11.40
கோல் இந்தியா 458.30 -4.75
விப்ரோ 204.10 2.52
பவர் கிரிட் 287.80 -12.35
ஓ.என்.ஜி.சி., 265.80 -8.25
நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை)
எஸ் பேங்க் 23.20 0.44
தி பெடரல் பேங்க் 288.20 -0.70
சுஸ்லான் எனர்ஜி 57.75 0.22
ஜி.எம்.ஆர்., ஏர்போர்ட்ஸ் 100.58 2.74
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 71.20 -0.28
நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை)
என்.பி.சி.சி., (இந்தியா) 101.30 2.20
பந்தன் பேங்க் 209.50 3.67
ஐநாக்ஸ் விண்ட் 93.14 -2.67
வொக்ஹார்ட் லிட். 2,025.00 254.00
பி.ஜி., எலக்ட்ரோபிளாஸ்ட் 483.00 6.95
மற்ற சில பங்குகளின் விலை விபரம்
சென்னை பெட்ரோலியம் 1,049.00 -4.10
சிட்டி யூனியன் பேங்க் 256.00 2.15
டாக்டர் ரெட்டிஸ் 1,320.00 1.00
எல் அண்டு டி., 4,090.00 42.50
எஸ்.பி.ஐ., 965.30 -2.50
29.05.2026 ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு
நிப்டி 23,902.15 24,002.80 23,484.75 23,547.75
நேற்று 61 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிப்டி, 10.30 மணிக்கு மேல் இறங்க ஆரம்பித்து, 3 மணிக்கு பெரியதொரு வீழ்ச்சியை சந்தித்து, நாளின் இறுதியில் 359 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. 19 பரந்த சந்தை குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன.
இவற்றில், 'நிப்டி100' குறியீடு அதிகபட்சமாக, 1.45 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி மிட் ஸ்மால்கேப் 400 50:50' குறியீடு குறைந்த பட்சமாக, 1.01 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில், 2 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 19 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
இவற்றில் நிப்டி ஐ.டி., குறியீடு அதிகபட்சமாக, 0.60 சதவீத ஏற்றத்துடனும், 'நிப்டி ஆயில் அண்டு காஸ்' குறியீடு அதிக பட்சமாக, 2.47 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. வர்த்தகம் நடந்த, 3,422 நிறுவனங்களின் பங்குகளில், 1,145 ஏற்றத்துடனும்; 2,171 இறக்கத்துடனும்; 106 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. 24,000 என்ற எல்லையை தாண்ட முடியாமல் நிப்டி தடுமாறுவதோடு அல்லாமல், மீண்டும் முக்கிய குறுகிய கால சராசரிகளுக்கு கீழே வந்துவிட்டது.
ஆர்.எஸ்.ஐ., மற்றும் எம்.ஏ.சி.டி., போன்ற மொமெண்டம் இண்டிகேட்டர்கள் பலவீனத்தையே காட்டுவதாக உள்ளன. ஸ்டாக்காஸ்ட்டிக் இண்டிகேட்டர் இறக்கம் தொடர்வதற்கான வாய்ப்பிருப்பதையே உணர்த்துகிறது.
பலவீனத்துடன் கூடிய ரேஞ்ச் பவுண்டு என்பதே நிப்டியின் தற்போதைய டெக்னிக்கல் நிலைமையாக இருக்கிறது. 23,750-ல் ரெசிஸ்டென்சையும் 23,450-ல் வலுவான சப்போர்ட்டையும் எதிர்பார்க்கலாம்.
ஆதரவு 23,350 23,160 22,960
தடுப்பு 23,875 24,195 24,395
