தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ சந்தை சரிவிலும் 3.50% உயர்ந்த எம்.சி.எக்ஸ்., பங்குகள்

 சந்தை சரிவிலும் 3.50% உயர்ந்த எம்.சி.எக்ஸ்., பங்குகள்

 சந்தை சரிவிலும் 3.50% உயர்ந்த எம்.சி.எக்ஸ்., பங்குகள்


ADDED : ஏப் 14, 2026 01:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2026 01:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ப ங்குச்சந்தையில் நிலவிய மந்தமான சூழலிலும், 'மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியா' எனப்படும் எம்.சி.எக்ஸ்., பங்கு நேற்றைய வர்த்தகத்தில் 3.50 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து வர்த்தகமானது. வர்த்தகத்தின் இடையே எம்.சி.எக்ஸ்., பங்குகள் 2,764 ரூபாய் வரை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டன.

கடந்த நான்கு வர்த்தக தினங்களில் மட்டும் இப்பங்கு 9 சதவீதம் வரை லாபம் ஈட்டியுள்ளது. வர்த்தக முடிவில் 3.92 சதவீதம் விலை உயர்ந்து 2,477 ரூபாய்க்கு நிறைவடைந்தது. இப்பங்குகளின் அதிரடி உயர்வால், நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 70,000 கோடி ரூபாய் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது

காரணங்கள்

*சர்வதேச தரக்கட்டுப்பாட்டு நிறுவனமான 'மோர்கன் ஸ்டான்லி', எம்.சி.எக்ஸ்., பங்குகளை 'ஓவர்வெயிட்' நிலைக்கு உயர்த்தி, அதன் இலக்கு விலையை 3,270 ரூபாயாக நிர்ணயித்துள்ளது

* உள்நாட்டு தரகு நிறுவனமான 'ஹெச்.டி.எப்.சி., செக்யூரிட்டீஸ்' நிறுவனமும் இப்பங்குகளை 'வாங்கலாம்' என பரிந்துரை செய்து, இலக்கு விலையை 2,950 ரூபாயாக உயர்த்தியுள்ளது

* கடந்த டிசம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 151 சதவீதம் அதிகரித்து, 401.12 கோடி ரூபாயாக உயர்ந்தது

* புதிய வர்த்தக தயாரிப்புகளின் அறிமுகம் மற்றும் வலுவான தொழில்நுட்ப கட்டமைப்பு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us