உலோக துறை பங்குகள் கடும் சரிவு 'நிப்டி மெட்டல்' குறியீடு 2% வீழ்ச்சி
உலோக துறை பங்குகள் கடும் சரிவு 'நிப்டி மெட்டல்' குறியீடு 2% வீழ்ச்சி
UPDATED : நவ 19, 2026 01:01 AM
ADDED : நவ 18, 2026 10:22 PM

சர்வதேச சந்தையில் உலோகங்களின் விலை சரிவு மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு ஆகிய காரணங்களால், இந்திய பங்கு சந்தையில் உலோக துறை பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. வர்த்தகத்துக்கு இடையே அதிகபட்சமாக 12,208 புள்ளிகள் வரை சரிவை சந்தித்த, 'நிப்டி மெட்டல்' குறியீடு வர்த்தக முடிவில் இரண்டு சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியை பதிவு செய்து 12,222 என்ற புள்ளியில் நிறைவடைந்தது. இக்குறியீட்டில் இடம்பெற்றுள்ள 15 நிறுவனங்களில் 14 நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டன.
முக்கிய காரணங்கள்
1. அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வு
2. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு
3. சர்வதேச சந்தையில் தாமிரம் விலை 5 மாத சரிவையும், அலுமினியம் விலை நடப்பு ஆண்டின் குறைந்தபட்ச அளவையும் எட்டியது
4. தங்கம் விலையும் 2 சதவீத சரிவை சந்தித்திருப்பது
5. உலகின் மிகப்பெரிய உலோக நுகர்வோரான சீனாவில் கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறை மீட்சி மந்தமாக உள்ளதால் ஸ்டீல், தாமிரம் மற்றும் அலுமினியத்திற்கான தேவை குறைந்திருப்பது.

