உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 13, 2026 02:39 AM

அ நிறம் | அளவு
தமிழ்நாட்டின் முன்னணி பால் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்றான 'மில்கி மிஸ்ட் டெய்ரி புட்' நிறுவனத்தின் 1,553 கோடி ரூபாய் பங்கு வெளியீட்டுக்கு இரண்டாம் நாளில் 2.17 மடங்கு விண்ணப்பங்கள் வந்து உள்ளன.
பங்கு விலை 133 முதல் 140 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இன்று மாலை வரை விண்ணப்பிக்க நேர அவகாசம் உள்ளது.
நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 3.56 மடங்கு விண்ணப்பித்துள்ளனர். சிறு முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு 2.44 மடங்கு விண்ணப்பித்துள்ள நிலையில், தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவில் 65 சதவீதம் விண்ணப்பித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
திரட்டும் நிதியில் 497 கோடி ரூபாய் கடனை அடைக்கவும், 469 கோடி ரூபாய் பெருந்துறை ஆலை விரிவாக்கத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
