தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ டிஜிட்டலில் தங்கம், வெள்ளி விற்பனையை மீண்டும் துவங்கிய எம்.எம்.டி.சி., - பி.ஏ.எம்.பி.,

 டிஜிட்டலில் தங்கம், வெள்ளி விற்பனையை மீண்டும் துவங்கிய எம்.எம்.டி.சி., - பி.ஏ.எம்.பி.,

 டிஜிட்டலில் தங்கம், வெள்ளி விற்பனையை மீண்டும் துவங்கிய எம்.எம்.டி.சி., - பி.ஏ.எம்.பி.,


ADDED : மே 09, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 01:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'எ ம்.எம்.டி.சி., - பி.ஏ.எம்.பி.,' நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட இணையதளம் மற்றும் செயலி வாயிலாக டிஜிட்டல் தங்கம் மற்றும் வெள்ளி விற்பனையை மீண்டும் நேரடியாக தொடங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த 'எம்.கே.எஸ். பி.ஏ.எம்.பி.,' மற்றும் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான 'எம்.எம்.டி.சி.,' ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவானதே 'எம்.எம்.டி.சி., - பி.ஏ.எம்.பி.,' நிறுவனம்.

இது, 'லண்டன் புல் லியன் மார்க்கெட் அசோசியேஷன்' அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட, இந்தியா வின் ஒரே தங்கம் மற்றும் வெள்ளி சுத்திகரிப்பு நிறு வனம் . சுவிட்சர் லாந்தின் உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பத்தையும், இந் திய சந்தையின் நுணுக்கங்க ளையும் இணைத்து இந்நிறு வனம் செயல்படுகிறது.

கடந்த 2017ல் தங்கத்தையும், 2023ல் வெள்ளியையும் டிஜிட்டல் வடிவில் அறிமுகம் செய்த இந்நிறுவனம், தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளுக்காக நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்த நேரடி சேவையை தற்போது மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னதாக, 'கூகுள் பே, பேடிஎம்' போன்ற செயலிகள் வழியாக மட்டுமே கிடைத்து வந்த இந்த சேவை, இனி இந்நிறுவனத்தின் சொந்த தளத்திலேயே கிடைக்கும்.

இந்த சேவையின் வாயிலாக முதலீட்டாளர் கள் வெறும் 10 ரூபாய் முதல் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய முடியும்.

இந்த டிஜிட்டல் முதலீடு களுக்கு ஈடாக, காப்பீடு செய்யப்பட்ட பாதுகாப்பான அறைகளில் நேரடி தங்கம் மற்றும் வெள்ளி இருப்பு வைக்கப்பட்டு தணிக்கை செய்யப்படும்.

முதலீட்டாளர்கள் தங்களின் இருப்பை அன்றைய சந்தை விலையில் விற்கவோ அல்லது நாணயங்கள், கட்டிகளாக மாற்றிக்கொள்ளவோ முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us