குறைவான கட்டணத்தால் அதிகரித்த மும்பை பங்கு சந்தையின் வர்த்தகம்
குறைவான கட்டணத்தால் அதிகரித்த மும்பை பங்கு சந்தையின் வர்த்தகம்
ADDED : மே 06, 2026 02:53 AM

ப ரிவர்த்தனை கட்டணங்கள் கணிசமாக குறைவாக இருப்பதால், டெரிவேட்டிவ் மற்றும் ஆப்ஷன் வர்த்தகத்தில், தேசிய பங்கு சந்தையை விட, மும்பை பங்கு சந்தை அதிக முதலீட்டாளர்களை கவர்ந்து வருகிறது.
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த எஸ்.டி.டி., எனப்படும் பங்கு பரிவர்த்தனை வரி உயர்வு, என்.எஸ்.இ.,யில் டெரிவேட்டிவ் வர்த்தகத்தை பாதித்துள்ளது. அதேவேளையில், குறைந்த கட்டணம் மற்றும் வியூக மாற்றங்கள் காரணமாக, பி.எஸ்.இ., சந்தை பெரிய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களை பொறுத்தவரை, என்.எஸ்.இ., ஒவ்வொரு ஒரு லட்சம் ரூபாய்க்கும் 1.83 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது. ஆனால், பி.எஸ்.இ.,யில் கட்டணம் இல்லை.
ஆப்ஷன் வர்த்தகத்தை பொறுத்தவரை, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய, என்.எஸ்.இ.,யில் 36 ரூபாய் கட்டணமாக உள்ள நிலையில், பி.எஸ்.இ.,யில் 5 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
ஏப்ரல் முதல் பியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்திற்கான எஸ்.டி.டி., வரி உயர்த்தப்பட்ட நிலையில், அதிக லாபம் ஈட்ட முடியாத சிறு முதலீட்டாளர்கள் என்.எஸ்.இ.,யிலிருந்து பி.எஸ்.இ.,க்கு மாறியுள்ளது தெரியவந்துள்ளது.
