மியூச்சுவல் பண்டு: ஊக்கத்தொகை திட்டத்துக்கு காலக்கெடு நீட்டித்த செபி
மியூச்சுவல் பண்டு: ஊக்கத்தொகை திட்டத்துக்கு காலக்கெடு நீட்டித்த செபி
ADDED : ஜன 08, 2026 02:27 AM

புதிய முதலீட்டாளர்கள் மற்றும் பெண் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில், மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்ட கூடுதல் ஊக்கத்தொகை திட்டத்தை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை, வரும் மார்ச் 1ம் தேதி வரை செபி நீட்டித்துள்ளது.
முன்னதாக பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு சவால்கள் காரணமாக, இந்த நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் 'டாப் 30' நகரங்களுக்கு அப்பாற்பட்ட நகரங்களில் இருந்து, முதல்முறையாக முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள்; நாடெங்கும் புதிய பெண் முதலீட்டாளர்களை கவரும் வினியோகஸ்தர்களுக்கு, இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மொத்த முதலீடு மற்றும் எஸ்.ஐ.பி., முறையிலான முதலீடுகளுக்கு ஒரு சதவீத கூடுதல் கமிஷன், அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை வழங்கப்படும். இதற்கு ஓராண்டு முதலீட்டு காலம் கட்டாயமாகும். 'லிக்விட்' பண்டுகள் மற்றும் இ.டி.எப்., எனும் 'எக்ஸ்சேஞ் டிரேடட்' பண்டுகள் போன்ற குறுகிய கால திட்டங்களுக்கு இது பொருந்தாது.

