உள்ளடக்கத்திற்கு செல்ல

மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.எப்., முகவர்களுக்கு இனி ஒரே தேர்வு
மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.எப்., முகவர்களுக்கு இனி ஒரே தேர்வு
ADDED : ஜூலை 06, 2026 02:13 AM

அ நிறம் | அளவு
மி யூச்சுவல் பண்டு மற்றும் எஸ்.ஐ.எப்., ஆகிய இரண்டையும் வினியோகம் செய்ய விரும்பும் முகவர்களுக்கு, புதிய கூட்டு சான்றிதழ் தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக செபி அறிவித்துள்ளது.
இது குறித்து, செபியின் முழுநேர உறுப்பினர் அமர்ஜீத் சிங் கூறும்போது, மியூச்சுவல் பண்டு மற்றும் எஸ்.ஐ.எப்., தயாரிப்புகளை வினியோகிக்க விரும்பும் முகவர்களுக்காக, 'கூட்டு மியூச்சுவல் பண்டு - எஸ்.ஐ.எப்., வினியோகஸ்தர் சான்றிதழ் தேர்வு' என்ற ஒரே தேர்வு கொண்டு வரப்பட உள்ளது.
இதன் வாயிலாக வினியோகஸ்தர்கள் தனித்தனியாக தேர்வுகள் எழுத வேண்டிய அவசியம் குறையும். முதலீட்டாளர்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்க முகவர்களின் தொழில்முறை தகுதியை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
என அவர் தெரிவித்துள்ளார்.
