
ஜீரோதா பண்டு ஹவுஸ் இரு திட்டங்கள் அறிமுகம்
ஜீ ரோதா பண்டு ஹவுஸ், 'நிப்டி 50 இ.டி.எப்., நிப்டி 50 இண்டெக்ஸ் பண்டு' என, இரண்டு புதிய பண்டுகளை அறிமுகப்படுத்தி உள்ளது. பண்டு திட்டங்களில் இணைய அக்., 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அக்., 14ம் தேதி முதலீட்டாளர்களுக்கு பண்டு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
குறைந்தபட்சமாக, இ.டி.எப்.,பில் 1,000 ரூபாய்; இண்டெக்ஸ் பண்டில் 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். இரண்டு திட்டங்களின் நோக்கம், நிப்டி 50 குறியீட்டை பின்பற்றி, பங்குகள், பங்குகள் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதாகும்.
டி.எஸ்.பி., மியூச்சுவல் பண்டு பிளெக்ஸி கேப் இ.டி.எப்.,
டி. எஸ்.பி., மியூச்சுவல் பண்டு நிறுவனம், இந்தியாவின் முதல் பிளெக்ஸி கேப் இ.டி.எப்., திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. நிப்டி 500 பிளெக்ஸி கேப், குவாலிட்டி 30 குறியீட்டை பின்பற்றி முதலீடு செய்யப்பட உள்ள இத்திட்டத்தில், சேருவதற்கு, வரும் அக்., 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
புதிய பண்டு திட்டம் முதலீட்டாளர்களுக்கு லார்ஜ் கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் என மூன்று வகையான நிறுவனங்களிலும் ஒரே திட்டத்தின் வாயிலாக முதலீடு செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. இத்திட்டம், குறியீட்டை போன்று அதே வருமானத்தை ஈட்டும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.