
'செக்டார் ரொட்டேஷன்' பண்டு
'ஜி யோ பிளாக்ராக் அசெட் மேனேஜ்மென்ட்' நிறுவனம், புதிதாக 'செக்டார் ரொட்டேஷன்' பண்டு ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய, வரும் 27ம் தேதி முதல், பிப்ரவரி 9ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பங்குச் சந்தையில் எந்த துறை சிறப்பாக செயல்படுகிறதோ, அதில் முதலீடு செய்து, மந்தமாக இருக்கும் துறையிலிருந்து வெளியேறுவதையே, 'செக்டார் ரொட்டேஷன்' எனப்படும். இதில், நிபுணர்களின் முடிவை மட்டும் நம்பாமல், தரவுகள் அடிப்படையில் ஏ.ஐ., தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலீடு செய்யும் துறைகள் தேர்வு செய்யப்படும் என, ஜியோ பிளாக்ராக் தெரிவித்துள்ளது.
குரோ நிப்டி பி.எஸ்.இ., - இ.டி.எப்.,
'கு ரோ மியூச்சுவல் பண்டு' அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில், 500 ரூபாயிலிருந்து முதலீட்டை துவங்கலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்ய வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 'நிப்டி பி.எஸ்.இ., இண்டெக்ஸில்' உள்ள நிறுவனங்களில், நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஆக்ஸிஸ் கிரேட்டர் சீனா ஈக்விட்டி எப்.ஓ.எப்.,
'ஆக்ஸிஸ் கிரேட்டர் சீனா ஈக்விட்டி எப்.ஓ.எப்.,' என்ற திட்டம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தியாவில் இருந்து சீனா, தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளின் சந்தையில் முதலீடு செய்ய வாய்ப்பு வழங்கும் ஒரே திட்டம் இதுவாகும். இத்திட்டத்தில் எஸ்.ஐ.பி., மற்றும் மொத்தமாக என, இந்திய ரூபாயிலேயே முதலீடு செய்யலாம். கடந்த ஜனவரி 2021ல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பு, கடந்த 2025 டிசம்பர் மாதம் 31ம் தேதி நிலவரப்படி, 1,696 கோடி ரூபாயாக உள்ளது. மேலும், இதன் ஆண்டு கூட்டு வளர்ச்சி விகிதம் 38.92 சதவீதமாக பதிவாகி உள்ளது.

