தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ மியூச்சுவல் பண்டு

 மியூச்சுவல் பண்டு

 மியூச்சுவல் பண்டு


ADDED : மே 20, 2026 01:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 01:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியலின்' புதிய 2 எஸ்.ஐ.எப்., திட்டங்கள்



ஐ -- எஸ்.ஐ.எப்., ஆக்டிவ் அசெட் அலோகேட்டர் லாங் - ஷார்ட் பண்டு:

நோக்கம்: சந்தை சூழலுக்கு ஏற்ப பங்குகள், கடன் பத்திரங்கள், கமாடிட்டி டெரிவேட்டிவ்கள் மற்றும் இன்விட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்து வருமானம் ஈட்டுவது.

ஐ- - எஸ்.ஐ.எப்., ஈக்விட்டி லாங் - ஷார்ட் பண்டு:

நோக்கம்: பல்வேறு துறைகளை சேர்ந்த 650க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதுடன், வெளிநாட்டு பங்குகளில் 35 சதவீதம் வரை முதலீடு செய்தும் லாபம் ஈட்டுவது.

துவங்கிய தேதி: மே 19, 2026

முடியும் தேதி: ஜூன் 2, 2026

குறைந்தபட்ச முதலீடு: ரூ.10 லட்சம்

புதிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த 'பிராங்க்ளின் டெம்பிள்டன்'


சர்வதேச சந்தைகளில் முதலீடு செய்யும் 'பிராங்க்ளின் இந்தியா ஏசியன் ஈக்விட்டி பண்டு மற்றும் பிராங்க்ளின் யு.எஸ்., ஆப்பர்சூனிட்டீஸ் ஈக்விட்டி ஆக்டிவ் பண்டு ஆப் பண்ட்ஸ்' ஆகிய திட்டங்களில், 'பிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்டு' நிறுவனம் தற்காலிக முதலீட்டு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி,

* புதிய முதலீடுகள் மற்றும் பிற திட்டங்களில் இருந்து மாற்றப்படும் தொகைகள், ஒரு 'பான்' எண்ணுக்கு மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மட்டுமே அனுமதி

* புதிய எஸ்.ஐ.பி., மற்றும் எஸ்.டி.பி., கணக்குகளுக்கு, ஒரு 'பான்' எண்ணுக்கு மாதத்திற்கு அதிகபட்சம், 50,000 ரூபாய் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும்

* ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள எஸ்.ஐ.பி., முதலீடுகள் வழக்கம்போல் தொடரும்

* இத்திட்டங்களில் இருந்து பணத்தை திரும்ப பெறுவதற்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

இந்த புதிய கட்டுப்பாடுகள் மே 18 முதல் அமலுக்கு வந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us