ADDED : மே 22, 2026 01:34 AM

முன்னணி 20 பங்குகளில் ரூ.1 லட்சம் கோடி முதலீடு
க டந்த ஜனவரி - ஏப்ரல் மாதங்களில் மியூச்சுவல் பண்டுகள் 20 முன்னணி லார்ஜ்கேப் பங்குகளில் கிட்டத்தட்ட 1.07 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன. 'ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் (ரூ.19,253 கோடி), ஹெச்.டி.எப்.சி., பேங்க் (ரூ.15,038 கோடி), பார்தி ஏர்டெல் (ரூ.8,890 கோடி), எட்டர்னல் (ரூ.8,119 கோடி), கோட்டக் மஹிந்திரா பேங்க் (ரூ.6,808 கோடி)' ஆகிய பங்குகள் அதிகபட்ச முதலீடுகளை ஈர்த்துள்ளன.
முதலீடுகளை நிறுத்திய 'பிராங்ளின் டெம்பிள்டன்'
'பிராங்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்டு' நிறுவனம் தனது 'பிராங்ளின் இந்தியா ரிட்டயர்மெண்ட் பண்டு' திட்டத்தில் 2026, மே 20ம் தேதி முதல் முதலீடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. புதிய முதலீடுகள், கூடுதல் முதலீடுகள், லம்ப்சம், புதிய எஸ்.ஐ.பி., மற்று எஸ்.டி.பி., பதிவுகள், ஸ்விச்-இன் ஆகிய அனைத்து வகையான முதலீடுகளுக்கும் இது பொருந்தும். மே 20ம் தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட எஸ்.ஐ.பி., எஸ்.டி.பி., முதலீடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
முதலீடுகளுக்கு தடை நீக்கம்: 'பி.என்.பி., பாரிபாஸ்'
'பரோடா பி.என்.பி., பாரிபாஸ் மியூச்சுவல் பண்டு' நிறுவனம் தனது 'பி.என்.பி., பாரிபாஸ் அக்வா பண்டு ஆப் பண்டு' திட்டத்தில் தடைகளை நீக்கி முதலீடு செய்ய மே 20ம் தேதி முதல் அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன் ஒரு முதலீட்டாளர் 5 லட்சம் ரூபாய் வரை மட்டுமே லம்ப்சம் முதலீடு செய்யலாம் என்று கட்டுப்பாடு இருந்தது. எஸ்.ஐ.பி., எஸ்.டி.பி., முதலீடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன
