ஆங்கர் முதலீடுகள் ஓவர்டேக் செய்த மியூச்சுவல் பண்டு
ஆங்கர் முதலீடுகள் ஓவர்டேக் செய்த மியூச்சுவல் பண்டு
UPDATED : செப் 20, 2025 11:44 PM
ADDED : செப் 20, 2025 11:43 PM

க டந்த சில காலாண்டுகளாகவே, புதிய பங்கு வெளியீடுகளின் ஆங்கர் ஒதுக்கீடுகளில், காப்பீடு நிறுவனங்களைக் காட்டிலும், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்துள்ளது.
![]() |
கடந்த நான்கு காலாண்டுகளில், ஐ.பி.ஓ.,வின் ஆங்கர் பிரிவில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களுக்கு 21,976 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், காப்பீடு நிறுவனங்களுக்கு 5,216 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மியூச்சுவல் பண்டுகள், முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் ஈட்டுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் நீண்ட காலப் பாதுகாப்பான முதலீடுகளை மட்டுமே விரும்புகின்றன. ஐ.பி.ஓ., முதலீடுகளில் ரிஸ்க் இருப்பதால், அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. காப்பீடு நிறுவனங்கள் பொதுவாக குறைந்த ரிஸ்க் உள்ள முதலீடுகளையே விரும்புகின்றன.