ADDED : மே 29, 2026 12:10 AM

'பை ன் லேப்ஸ்' நிறுவனத்தின், 1.75 சதவீத பங்குகளை 'எஸ்.பி.ஐ., மற்றும் நிப்பான் இந்தியா' ஆகிய மியூச்சுவல் பண்டுகள் வாங்கி உள்ளன. பங்கு ஒன்றுக்கு 135 ரூபாய் என்ற விலையில், 177.79 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு வாங்கியுள்ளது.
நிப்பான் இந்தியா மியூச்சுவல் பண்டு நிறுவனமும், அதே விலையில் கிட்டத்தட்ட, 94.50 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளது. இதன் காரணமாக, இந்நிறுவனத்தின் பங்கு விலை முந்தைய வர்த்தக நாளில் 5.70 சதவீதம் உயர்ந்து 145.83 ரூபாயாக நிலைபெற்றது.
அதேபோல, 'இண்டோகோ ரெமடீஸ்' நிறுவனத்தின் 26.88 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, 'ஐ.சி.ஐ.சி.ஐ., பு ரூடென்ஷியல் மியூச்சுவல் பண்டு' நிறுவனம் வாங்கியுள்ளது.
இதன் காரணமாக இந்நிறுவன பங்கு விலையும் 5.60 சதவீதம் உயர்ந்து 204 ரூபாயாக நிலைபெற்றது.
