sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

லாபம்

/

 என்.சி.டி., வெளியிடுகிறது முத்துாட் பின்கார்ப்

/

 என்.சி.டி., வெளியிடுகிறது முத்துாட் பின்கார்ப்

 என்.சி.டி., வெளியிடுகிறது முத்துாட் பின்கார்ப்

 என்.சி.டி., வெளியிடுகிறது முத்துாட் பின்கார்ப்


ADDED : பிப் 04, 2026 01:49 AM

Google News

ADDED : பிப் 04, 2026 01:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முத்துாட் பின்கார்ப், என்.சி.டி., எனும் பங்குகளாக மாறாத கடன் பத்திர வெளியீடு வாயிலாக, 600 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.

நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கடன் பத்திரத்தின் விலை 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றை, 24, 36, 60, 72 மாத கால அளவைக் குறிப்பிட்டு வாங்கிக்கொள்ளலாம். இவற்றுக்கு 8.70 முதல் 9.10 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். பொதுமக்கள் வரும் 16ம் தேதி வரை கடன் பத்திரங்களை வாங்க விண்ணப்பிக்கலாம்.

இந்த பத்திரங்களுக்கு 'கிரிசில் ரேட்டிங்' நிறுவனத்தின் 'ஏஏ-/பாசிட்டிவ்' மற்றும் 'பிரிக்வொர்க் ரேட்டிங்ஸ்' நிறுவனத்தின் 'பி.டபிள்யு.ஆர்., ஏஏ/ஸ்டேபிள்' தரவரிசை புள்ளிகள் வழங்கப்பட்டு உள்ளன.

இப்பத்திரங்கள், மும்பை பங்குச் சந்தையின் கடன் பத்திரங்கள் பிரிவில் பட்டியலிடப்படும். கடன் பத்திர வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் தொகை, கடன் வர்த்தகம், கடன்களை திரும்பச் செலுத்துதல் மற்றும் நிறுவன செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us