ADDED : மார் 18, 2026 01:15 AM

டிமேட் கணக்கு மற்றும் மியூச்சுவல் பண்டுகளுக்கு வாரிசுதாரர் நியமனத்தை எளிதாக்கும் வகையில், சில திருத்தங்களை செபி பரிந்துரைத்துள்ளது.
அதன் முக்கிய அம்சங்கள்
இனி நாமினி யின் பெயர் மற்றும் உறவுமுறையை மட்டும் குறிப்பிட்டால் போதும். பான் அல்லது ஆதார் போன்ற கூடுதல் விபரங்கள் கட்டாயமில்லை
ஒரு கணக்குக்கு அதிகபட்சமாக 4 நாமினிகளை நியமிக்க பரிந்துரை (இதற்கு முன் 10 வரை அனுமதிக்கப்பட்டிருந்தது)
புதிய கணக்கு துவக்கும்போது, வாரிசுதாரர் நியமனம் செய்வது என்பது 'டிபால்ட் தேர்வாக' இருக்கும். பழைய கணக்குகளில் நாமினி இல்லை என்றால், அவர்களுக்கு தொடர்ந்து நினைவூட்டல் செய்திகள் அனுப்பப்படும்
கணக்கு வைத்திருப்பவர் உடல்நலக் குறைவால் (உடல் ரீதியாக மட்டும்) செயல்பட முடியாதபோது, அவரது கணக்கை நாமினி இயக்குவதில் உள்ள சிக்கல்களை தவிர்க்க, தற்போதுள்ள 'பவர் ஆப் அட்டர்னி' முறையையே பயன்படுத்தலாம்.
