தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ புதிய டிமேட் கணக்குகள் ஜனவரியில் சிறிது உயர்வு

 புதிய டிமேட் கணக்குகள் ஜனவரியில் சிறிது உயர்வு

 புதிய டிமேட் கணக்குகள் ஜனவரியில் சிறிது உயர்வு


ADDED : பிப் 10, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 10, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கங்கள் காரணமாக, சிறு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் அணுகுவதற்கு மத்தியில், கடந்த ஜனவரியில், தேசிய பங்குச்சந்தையில் 3.02 லட்சம் புதிய டிமேட் கணக்குகள் துவங்கப்பட்டன. இதனால், மொத்த டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை 4.511 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பரில் இது 4.481 கோடியாக இ ருந்தது.

பங்கு தரகு நிறுவனங்களில், அதிகபட்சமாக 'குரோ' வாயிலாக 3.53 லட்சம் புதிய டிமேட் கணக்குகள் துவங்கப்பட்டு, இதன் மொத்த கணக்குகள் எண்ணிக்கை 1.248 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய டிசம்பரில் இது 1.212 கோடியாக இருந்தது.

இதன் வாயிலாக, என்.எஸ்.இ.,யில் உள்ள மொத்த டிமேட் கணக்குகளில், குரோ நிறுவனத்தின் பங்கு 27.66 சதவீதமாக அதிகரித்துள்ளது. பிற நிறுவனங்களான ஜீரோதாவின் பங்கு 15.20 சதவீதமாகவும், ஏஞ்சல் ஒன் பங்கு 14.95 சதவீதமாகவும் சற்று குறைந்துள்ளன.

கடந்தாண்டு ஏப்ரலில், என்.எஸ்.இ.,யில் மொத்த டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை புதிய உச்சமாக 4.886 கோடியாக இருந்தது. இதனை தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களில் சரிவை கண்ட நிலையில், கடந்த ஜனவரியில் சற்று மீட்சி கண்டுள்ளது.

இந்தியா -- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் பட்சத்தில், வரும் மாதங்களில் புதிய டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us