ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
ஓய்வூதிய புகார்களுக்கு புதிய வசதி; 'பென்ஷன் சகாயக்' தளம் அறிமுகம்
ADDED : ஜூன் 23, 2026 09:18 AM

ஓய்வூதிய சந்தாதாரர்களின் புகார்களை எளிதாக பதிவு செய்து தீர்வு காண, 'பென்ஷன் சகாயக்' என்ற ஏ.ஐ., அடிப்படையிலான புதிய தளத்தை, பி.எப்.ஆர்.டி.ஏ., எனும் 'பென்ஷன் பண்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்' அறிமுகப்படுத்தி உள்ளது. இது, முந்தைய சி.ஜி.எம்.எஸ்., தளத்திற்கு மாற்றாக செயல்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த தளம் வாயிலாக, ஓய்வூதிய சந்தாதாரர்கள், புகாரின் பதிவு முதல் தற்போதைய நிலையை அறிதல் வரை அனைத்தையும் ஒரே இடத்தில் மேற்கொள்ள முடியும். குறிப்பாக, மூத்த குடிமக்கள், கிராமப்புற பயனாளர்கள் மற்றும் பிராந்திய மொழி பேசும் சந்தாதாரர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
'பென்ஷன் சகாயக்' தளத்தின்
முக்கிய அம்சங்கள்
பி.ஆர்.ஏ.என்., எண் அல்லது கடவுச்சொல் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை
மொபைல் எண் மற்றும் ஓ.டி.பி., வாயிலாக உள்நுழைந்து புகார் அளிக்கலாம்
ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள பல பி.ஆர்.ஏ.என்., கணக்குகளும் ஒரே இடத்தில் தெரியும்
'பாஷிணி' ஏ.ஐ., இணைப்பு வாயிலாக, 22 இந்திய மொழிகளில் புகார் பதிவு செய்யலாம்
குரல் அல்லது எழுத்து வாயிலாக புகார் அளிக்கும் வசதியும் உள்ளது.
