தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிமுறைகள்

 இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிமுறைகள்

 இன்று முதல் அமலுக்கு வரும் புதிய வருமான வரி விதிமுறைகள்


ADDED : ஏப் 01, 2026 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 02:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய வரி விதிப்புகள் மற்றும் சட்ட மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதில், சாமானியர்களுக்கு சலுகைகளும், 'எப் அண்டு ஓ' வர்த்தகம் செய்பவர்களுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

 1961ம் ஆண்டு முதல் நடை முறையில் இருந்த பழைய வருமான வரி சட்டம் நீக்கப்பட்டு, எளிமையான 'வருமான வரி சட்டம் 2025' இன்று முதல் அமலாகி றது. இதன்படி, இனி 'முந்தைய ஆண்டு', 'மதிப்பீட்டு ஆண்டு' என்ற குழப்பங்கள் இருக்காது. அனைத்தும் ஒரே 'வரி ஆண்டு' என அழைக்கப்படும்

 'வீட்டு வாடகை படி' மீதான வரி விலக்கு வரம்பு உயர்வு

 'குழந்தைகள் கல்வி படி' இதுவரை ஒரு குழந்தைக்கு மாதம் 100 ரூபாயாக இருந்தது. இனி 3,000 ரூபாயாக உயர்வு

 'விடுதி செலவு படி' ஒரு குழந்தைக்கு மாதம் 300 ரூபாயிலிருந்து 9,000 ரூபாயாக உயர்வு

 அலுவலகம் வழங்கும் ஒரு வேளை உணவிற்கான வரி விலக்கு வரம்பு 50 ரூபாயிலிருந்து 200 ரூபாயாக உயர்வு.

 இவற்றால், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 1.05 லட்சம் ரூபாய் வரை வரி சேமிப்பு கிடைக்க வாய்ப்புள்ளது

 நிறுவனத்திடமிருந்து பெறும் பரிசுகளுக்கான வரி விலக்கு வரம்பு 5,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்வு.

 புதிய சட்டம் வந்தாலும், தற்போதைய வரி விகிதங்களில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால், சட்டத்தின் மொழிநடை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. சாதாரண மக்களும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

 பழைய சட்டத்திலிருந்து புதிய சட்டத்துக்கு மாறும்போது குழப்பம் ஏற்படாமல் இருக்க, வருமான வரித்துறையின் இணையதளம் இரண்டு சட்டங்களுக்கும் ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஆண்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள், அப்பீல்கள் அனைத்தும் பழைய 1961ம் ஆண்டு சட்டத்தின்படியே தொடரும். புதிய நடவடிக்கைகள் அனைத்தும் புதிய சட்டத்தின் கீழ் வரும்

 பங்குச் சந்தையில் 'டெரிவேட்டிவ்ஸ்' பிரிவில் வர்த்தகம் செய்வதை குறைக்க பியூச்சர் வர்த்தகத்துக்கு, 'எஸ்.டி.டி.,' 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாகவும்; ஆப்ஷன் வர்த்தகத்துக்கு 0.10 சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாகவும் உயர்த்தப் பட்டுள்ளது.

 வெளிநாட்டு சுற்றுலா பேக்கேஜ்களுக்கான 'டி.சி.எஸ்., வரி' 20 சதவீதத்திலிருந்து இரண்டு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கல்வி மற்றும் மருத்துவத்துக்காக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும்போதும், வரி 5 சதவீதத்திலிருந்து இரண்டு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us