
'எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்டு' இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகம்
1. எஸ்.பி.ஐ., கிரிசல் - ஐ.பி.எக்ஸ்., பைனான்சியல் சர்வீசஸ் 3 - -6 மாத கால டெபிட் இண்டெக்ஸ் பண்டு
2. எஸ்.பி.ஐ., கிரிசல் - ஐ.பி.எக்ஸ்., பைனான்சியல் சர்வீசஸ் 9 - 12 மாத கால டெபிட் இண்டெக்ஸ் பண்டு
குறைந்தபட்ச முதலீடு: ரூ.5,000
என்.எப்.ஓ., காலம்: ஏப்ரல் 20ம் தேதி வரை
நோக்கம்: நிதி சேவை நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்களில், அதன் இண்டெக்ஸ்களை பின்பற்றி முதலீடு செய்யப்படும்
யாருக்கு ஏற்றது: பணத்தை ஒரு சில மாதங்கள் மட்டும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் மற்றும் எக்சிட் லோடு இல்லாத லிக்விடிட்டியை விரும்புவோருக்கு ஏற்றது.
'தி வெல்த் கம்பெனி' இரண்டு எஸ்.ஐ.எப்., பண்டுகள் அறிமுகம்
1. டபிள்யு.எஸ்.ஐ.எப்., ஈக்விட்டி லாங் - -ஷார்ட் பண்டு
2. டபிள்யு.எஸ்.ஐ.எப்., ஈக்விட்டி எக்ஸ் - டாப் 100 லாங் - -ஷார்ட் பண்டு
குறைந்தபட்ச முதலீடு: ரூ.10,00,000
என்.எப்.ஓ., காலம்: ஏப்ரல் 29ம் தேதி வரை
நோக்கம்: பங்குகளை வாங்குவது, விற்பது என இரு உத்திகளையும் பயன்படுத்தி, சந்தை ஏற்ற இறக்கங்களின் போது நஷ்டத்தை குறைத்து நிலையான லாபம் ஈட்டுவது
யாருக்கு ஏற்றது: சந்தையின் சரிவுகளிலிருந்து தற்காத்து கொள்ள விரும்பும் மற்றும் நவீன முதலீட்டு உத்திகளை எதிர்பார்க்கும் முதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்களுக்கு.
'பஜாஜ் லைப் இன்சூரன்ஸ் புதிய இண்டெக்ஸ் பண்டு
'பஜாஜ் லைப் இன்சூரன்ஸ்' நிறுவனம், புதிதாக 'நிப்டி 500 லோ வொலாடிலிட்டி 50 இண்டெக்ஸ் பண்டு' என்ற யூலிப் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. நிப்டி 500 பட்டியலில், அதிக ஏற்ற இறக்கம் இல்லாத 50 பங்குகளில் இந்த நிதி முதலீடு செய்யப்படும். இந்த நிதியில் கிட்டத்தட்ட 79 சதவீத முதலீடு பெரிய நிறுவன பங்குகளிலும், மீதமுள்ள தொகை மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட உள்ளன. முதலீட்டாளர்களுக்கு சீரான வருமானமும், பரவலான முதலீடும் கிடைக்க செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த என்.எப்.ஓ., திட்டம் ஏப்., 30ம் தேதி வரை நடைபெறும்.

