
ஆக்சிஸ் பி.எஸ்.இ., செக்டர் லீடர்ஸ் இண்டெக்ஸ் பண்டு
'ஆ க்சிஸ் மியூச்சுவல் பண்டு' நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய பண்டில், குறைந்தபட்சமாக 100 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், ஜனவரி 23 முதல் பிப்ரவரி 6 வரை விண்ணப்பிக்கலாம். 21 துறைகளில் உள்ள 3 முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவதே இந்த பண்டின் நோக்கம்.
ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் ஸ்மால்கேப் பண்டு
க டந்த 2024ம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் இந்த பண்டில் சந்தா பெறுவது நிறுத்தப்பட்டிருந்த நிலையில், வரும் ஜனவரி 23ம் தேதி முதல் மீண்டும் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, முதலீட்டாளர்கள் இந்த பண்டில் மொத்தமாகவோ, எஸ்.ஐ.பி., வாயிலாகவோ முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரோ நிப்டி பி .எஸ்.இ., இ.டி.எப்.,
'குரோ மியூச்சுவல் பண்டு' அறிமுகப்படுத்தியுள்ள இத்திட்டத்தில், 500 ரூபாயிலிருந்து முதலீட்டை துவங்கலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்ய ஜனவரி 22 முதல் வரும் பிப்ரவரி 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 'நிப்டி பி.எஸ்.இ., இண்டெக்ஸில்' உள்ள நிறுவனங்களில், நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பி.என்.பி., மெட்லைப் லீடர்ஸ் இண்டெக்ஸ் பண்டு
'பி .என்.பி., மெட்லைப்' நிறுவனம் துவங்கியுள்ள இந்த திட்டமானது யூலிப் வகையை சேர்ந்தது. இதில், முதலீட்டுடன் சேர்த்து ஆயுள் காப்பீடு வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக டிவிடெண்ட் வழங்கும் 50 முன்னணி நிறுவனங்களில் , நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து லாபத்தை பெருக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

