UPDATED : ஜன 25, 2026 01:29 AM
ADDED : ஜன 25, 2026 01:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரண்டு இ.டி.எப்., அறிமுகம்
'மி ரே அசெட்' மியூச்சுவல் பண்டு நிறுவனம், ஹெல்த்கேர் மற்றும் உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் முதலீடு செய்யும் வகையில் இரண்டு புதிய இ.டி.எப்.,களை அறிமுகப்படுத்தியுள்ளது. 'மிரே அசட் நிப்டி 500 ஹெல்த்கேர் இ.டி.எப்., மற்றும் மிரே அசட் நிப்டி இந்தியா இன்ப்ராஸ்ட்ரக்சர் அண்டு லாஜிஸ்டிக் இ.டி.எப்.,' ஆகிய இரண்டிலும் குறைந்தபட்சம் 5,000 ரூபாயில் இருந்து முதலீட்டை துவங்கலாம்.
![]() |
'ஹெல்த்கேர்' திட்டத்தில் வரும் 27 முதல் பிப்ரவரி 6 வரையிலும், 'உட்கட்டமைப்பு' திட்டத்தில் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 9ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


