
எஸ்.பி.ஐ., குவாலிட்டி பண்டு
குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000
துவங்கும் நாள் : 28.01.2026
நிறைவு நாள் : 11.02.2026
நோக்கம் : நீண்ட கால அடிப்படையில், வலுவான அடிப்படை கொண்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து, லாபத்தை ஈட்டுவது.
எடெல்வெய்ஸ் பைனான்சியல் சர்வீசஸ் பண்டு
குறைந்தபட்ச முதலீடு : ரூ.100
துவங்கிய நாள் : 27.01.2026
நிறைவு நாள் : 10.02.2026
நோக்கம் : வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் உட்பட நிதிச் சேவை சார்ந்த துறைகளில் முதலீடு செய்வதன் வாயிலாக நீண்ட கால அடிப்படையில் லாபம் ஈட்டுவது.
அர்த்தயா எஸ்.ஐ.எப்.,
'யூ னியன் மியூச்சுவல் பண்டு' நிறுவனம், 'அர்த்தயா எஸ்.ஐ.எப்' என்ற பெயரில் புதிய சிறப்பு முதலீட்டு பண்டு தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த தளம் பங்குகள், ஹைபிரிட் மற்றும் நிலையான வருமானம் தரும் திட்டங்கள் ஆகிய பிரிவுகளில், நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் முதலீட்டு உத்திகளை வழங்கும். எஸ்.ஐ.எப்., என்பது சாதாரண மியூச்சுவல் பண்டுகளுக்கும், அதிக முதலீடு தேவைப்படும் பி.எம்.எஸ்., போன்ற சேவைகளுக்கும் இடைப்பட்ட சிறப்பு முதலீட்டு முறையாகும்.

