ADDED : பிப் 04, 2026 01:59 AM

கோட்டக் மஹிந்திரா ஏ.எம்.சி., நிறுவனம், 'கோட்டக் சர்வீசஸ் பண்டு' என்ற பெயரில், புதிய பண்டு ஒன்றை துவக்கி உள்ளது. இன்று முதல் 18ம் தேதி வரை இத்திட்டத்தில் இணையலாம். குறைந்தபட்ச முதலீடு 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் சார்ந்த சேவைகளை அடிப்படையாக கொண்ட தொலைத்தொடர்பு, சுகாதாரம், தளவாடங்கள், நிதிச் சேவைகள், தகவல் தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் எண்ணெய் - எரிவாயுத் துறைகள் உள்ளிட்ட சேவை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதே இதன் நோக்கமாகும். 'நியாயமான விலையில் வளர்ச்சி' என்ற முதலீட்டு அணுகுமுறையை பின்பற்ற உள்ளது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் சேவைகள் துறை, மொத்த மதிப்புக்கூட்டலில் 55 சதவீதமும், வேலைவாய்ப்பில் 31.5 சதவீதமும் பங்களிப்பை அளித்து வருகிறது. தனிநபர் வருமானம் உயர்வு, டிஜிட்டல் செயலாக்கம் மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை காரணமாக சேவைகள் துறை, நல்ல வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது.

