உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 27, 2026 02:58 AM

அ நிறம் | அளவு
கடந்த ஆறு ஆண்டுகளில் முதல்முறையாக, நிப்டி தொடர்ச்சியாக ஏழு வாரங்களாக சரிந்து வருகிறது. இந்த ஏழு வாரங்களில் நிப்டி கிட்டத்தட்ட 6.30 சதவீதம் சரிந்துள்ளது.
அமெரிக்காவின் 10 ஆண்டு மற்றும் 30 ஆண்டு கடன் பத்திரங்களின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளதே பங்கு சந்தை சரிவுக்கு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
செப்டம்பர் மாதத்தில் 25ம் தேதி வரை அன்னிய முதலீட்டாளர்கள் 17,131 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றுள்ளனர். 2026ம் ஆண்டில் இதுவரை 2.41 லட்சம் கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றுள்ளனர். விற்பனை அழுத்தம் கடுமையாக இருப்பதால் சந்தை சரிந்து வருகிறது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
