தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ நிப்டி 24,200ஐ தாண்ட சிரமப்படலாம்

 நிப்டி 24,200ஐ தாண்ட சிரமப்படலாம்

 நிப்டி 24,200ஐ தாண்ட சிரமப்படலாம்


ADDED : ஏப் 25, 2026 12:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 12:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நிப்டி

நேற்று 27 புள்ளிகள் இறக்கத்துடன் ஆரம்பித்த நிப்டி, நாளின் இறுதியில் 275 புள்ளிகள் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் சரிவுடனே நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி மைக்ரோகேப் 250' குறியீடு அதிகபட்சமாக 1.40 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி ஸ்மால்கேப்50' குறியீடு குறைந்தபட்சமாக 0.54 சதவீத வீழ்ச்சியுடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளும் சரிவுடனே முடிந்தன. இவற்றில், 'நிப்டி ஐ.டி., குறியீடு' அதிகபட்சமாக 5.29 சதவீதமும், ' நிப்டி பி.எஸ்.யு., பேங்க்' குறியீடு குறைந்தபட்சமாக 0.15 சதவீதமும் சரிவுடன் காணப்பட்டன.

வர்த்தகம் நடந்த 3,395 பங்குகளில் 863 ஏற்றத்துடனும் 2,428 இறக்கத்துடனும், 104 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. மொமெண்டம் இண்டிகேட்டர்கள் வலுவிழந்து விட்டன. எனவே, சமீபத்தில் கண்ட ஏற்றம் தொடர்வது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 23,700, 23,300 என அடுத்த சப்போர்ட் லெவல்களை நோக்கி பயணிப்பதற்கான வாய்ப்பே கூடுதலாக இருக்கிறது. ஏற்றம் வந்தாலுமே செய்திகள் மிகவும் சாதகமாக இல்லாத பட்சத்தில் 24,200ஐ தாண்டுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

ஆதரவு 23,725 23,575 23,425

தடுப்பு 24,125 24,350 24,500

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us