தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/லாபம்/ புதிய உச்சத்தை தொட்ட 'நிப்டி மிட்கேப் 100' குறியீடு

 புதிய உச்சத்தை தொட்ட 'நிப்டி மிட்கேப் 100' குறியீடு

 புதிய உச்சத்தை தொட்ட 'நிப்டி மிட்கேப் 100' குறியீடு


ADDED : மே 27, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 12:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய பங்கு சந்தைகள் நேற்று சரிவுடன் காணப்பட்டாலும், 'நிப்டி மிட்கேப் 100' குறியீடு, வர்த்தகத்தின் இடையே முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது.

நேற்றைய வர்த்தகத்தில், 'நிப்டி மிட்கேப் 100' குறியீடு 62,365 புள்ளிகளை தொட்டு, புதிய வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. வர்த்தக நிறைவில், 0.54 சதவீத உயர்வுடன் 62,299 புள்ளிகளில் முடிந்தது.

நேற்றைய வர்த்தகத்தின்போது, மிட்கேப் பங்குகளில் முதலீடு அதிகரித்ததால், 'டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன், இன்போ எட்ஜ் இந்தியா, பிரீமியர் எனர்ஜீஸ், வாரீ எனர்ஜீஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், பேடிஎம்' உள்ளிட்ட நிறுவன பங்குகள் 5 சதவீதம் வரை உயர்ந்திருந்தன.

மிட்கேப் பிரிவில் மற்றொரு நிறுவனமான 'அதானி டோட்டல் கேஸ்' பங்குகள், நேற்று, 11 சதவீதம் உயர்ந்த நிலையில், இறுதியில், 8 சதவீத ஏற்றத்துடன் ஒரு பங்கு விலை 713.10ஆக இருந்தது.

இதுதவிர, 'பி.எஸ்.இ., லாரஸ் லேப்ஸ், பாலிகேப் இந்தியா' ஆகிய நிறுவன பங்குகள் நேற்று முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்தன.

மிட்கேப் 100 குறியீட்டில் உள்ள பங்குகளி ல் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியது, மின்சாரம் மற்றும் உலோகம் சார்ந்த பங்குகளில் ஏற்பட்ட வலுவான ஏற்றம் போன்றவையே இந்த முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்தில், நிப்டி மிட்கேப் 100 குறியீடு 3.40 சதவீதம் உயர்ந்துள்ளது; அதே நேரத்தில், 'நிப்டி 50' குறியீடு 0.10 சதவீதம் குறைந்து ள்ளது.

ஏப்ரல் மாதத்திலிருந்து பார்க்கும்போது, மிட்கேப் குறியீடு 18.40 சதவீதம் உயர்ந்திருக்கிறது; இதே காலத்தில், நிப்டி 50 வெறும் 7.80 சதவீதம ் மட்டுமே உயர்ந்து உள்ளது.

கடந்த ஒரு மாதத்தில், நிப்டி மிட்கேப் 100 குறியீடு 3.40 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், 'நிப்டி 50' குறியீடு 0.10 சதவீதம் குறைந்துள்ளது. ஏப்ரல் மாதத்திலிருந்து பார்க்கும்போது, மிட்கேப் குறியீடு 18.40 சதவீதம் உயர்ந்திருக்கிறது; இதே காலத்தில் நிப்டி 50 வெறும் 7.80 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.

மிட்கேப் பங்குகளின் மதிப்பீடு அதிகரிப்பு பெரிய நிறுவன பங்குகளைவிட மிட்கேப் பங்குகளில் முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இருப்பினும், மிட்கேப் பங்குகளின் மதிப்பீடுகள் ஏற்கனவே உயர்ந்திருப்பதால், கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். மேலும், வேகமாக உயர்ந்த பங்குகளில் ஒரே நேரத்தில் அதிக முதலீடு செய்வதை தவிர்த்து, தரமான நிறுவனங்களைத் தேர்வு செய்வது நல்லது. குறுகியகால ஏற்றத்தை மட்டும் பார்த்து முதலீடு செய்யாமல், நிறுவனத்தின் அடிப்படை வலிமை, வருமான வளர்ச்சி மற்றும் கடன் நிலை போன்றவற்றையும் கவனிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us