உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 27, 2026 12:40 AM
ADDED : நவ 26, 2026 11:18 PM
அ நிறம் | அளவு
ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகளுக்கான 'நிப்டி ரியல்டி' குறியீடு, நேற்று மூன்று சதவீதத்துக்கு மேல் உயர்ந்து 52 வார உச்சத்தை தொட்டுள்ளது.
பிரெஸ்டிஜ் எஸ்டேட்ஸ், பிரிகேட் என்டர்பிரைசஸ், லோதா டெவலப்பர்ஸ் உள்ளிட்ட முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன.
கார்ப்பரேட் திவால் தீர்வு நடைமுறை விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களால், இத்துறையில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதோடு, வீடு வாங்குபவர்களின் நலனும் பாதுகாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விதிமுறைகள் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுவதால், நேற்று நிப்டி ரியல்டி குறி யீடு கிட்டத்தட்ட நான்கு சதவீதம் உயர்ந்துள்ளது.
